Digital Marketing Challenge 2018

NCIT’s
DIGITAL MARKETING CHALLENGE 2018

போட்டி பின்வரும் விடயங்களுக்கு நடைபெறும்

1. PHOTOGRAPH (Single Photo with Description)
2. VIDEO Banner (Max 30 Sec)
3. DIGITAL Poster (851 pixels width x 315 pixels height)
4. Blog Content Writing (1000 Words – 1500 words)

உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு தொழில்நுட்பத்தின் ஊடாக எயிட்ஸ் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கொண்டதாக இப்போட்டி அமையும்.

உள்ளடங்கங்கள் பாலியல் விழிப்புணர்வு , இணையவழி பாலியல் குற்றங்கள், தவறான மற்றும் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தைகள் குறித்த விடயங்களை மையப்படுத்தியவையாகவும் அவை தொடர்பிலான விழிப்புணர்வு அனைவரையும் சென்றடையும் வண்ணம் சமூக வலைத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமையவேண்டும். உங்கள் ஆக்கங்கள் ஒரு கவர்ச்சிகரமான பிரச்சார நடவடிக்கைக்குரியதாக இருத்தல்வேண்டும்.

● பாலியல் விழிப்புணர்வு
● இலத்திரனியில் சந்தைப்படுத்தல் துறையில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவித்தல்

ஆகிய இரண்டு இலக்குகளையும் அடைவதே இந்தப்போட்டியின் பிரதான நோக்காகும்

பரிசுகள்
ஒவ்வொரு விடயத்திலும்
முதலாம் இடத்தை பெறுபவர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படும்
1. PHOTOGRAPH : 10,000 LKR
2. VIDEO Banner : 25,000 LKR
3. DIGITAL Poster : 10,000 LKR
4. Blog Content writing : 10,000 LKR

● 2ம் 3ம் இடத்தினை பெறுபவர்களுக்கும் பரிசில்கள் உண்டு

● அனுப்பி வைக்கப்படும் படைப்புக்களில் தகுதிபெறும் ஆக்கங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
● விருது வழங்கும் நிகழ்வு டிசெம்பர் மாத முற்பகுதியில் இடம்பெறும். இது தொடர்பான அறிவித்தல் மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படும்.

விதிகள்

1. ஆக்கங்களின் புத்தாக்க சிந்தனைக்கு முன்னுரிமை வழங்கப்படும்
2. விண்ணப்ப முடிவுத்திகதி 31.12.2018
3. ஆக்கங்கள் அனுப்பிவைப்பதற்கு முன்பாக http://challenge.ncit.lk விண்ணப்பதாரிகள் பதிவு செய்யவேண்டும்
4. ஆக்கங்கள் 31.12.2018 முன்பாக challenge@ncit.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது Northern Chamber of Information Technology NCIT Business Incubation Center, இல 121/1 மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ ஒப்படைக்க வேண்டும்.
5. ஆக்கங்கள் யாவும் மென்பிரதிகளாக (Soft Copy) இறுவட்டில் அல்லது மின்னஞ்சல் மூலமாக கையளிக்கப்பட்ட வேண்டும்.மின்னஞ்சலில் அனுப்பும்போது தலைப்பாக DIGITAL MARKETING CHALLENGE 2018 என இடவேண்டும் தவறாது உங்கள் தொடர்பு  விபரங்களையும் இணைத்து இனுப்பவும்
6. விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் இல்லை
7. படைப்புக்கள் சொந்தமானதாக இருக்க வேண்டும்.
8. படைப்புக்கள் வேறு எங்கும் பிரசுரிக்கப்பட்டதாகவோ ஒளிபரப்பட்டதாகவோ இருக்கக்கூடாது.
9. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
10. அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பொது வெளியில் பயன்படுத்தும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு( படைப்பாளருக்கான அங்கீகாரம் வழங்கப்படும்)

மேலதிக விபரங்களுக்கு….

Northern Chamber of Information Technology
NCIT Business Incubation Center
121/1 Power house Road,Jaffna
Tel: +94 21 222 9600 | +94 777 563144 | 0783257558

Scroll to Top